கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால், அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைப்பார்.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் வரும் 12 ஆம் தேதி டொமினிகாவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளனர். அங்கு பீச்சில் வாலிபால் விளையாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டிருந்தது.
இயான் பெல் ரன் அவுட்: அப்பீலை திரும்ப பெற்ற தோனியின் வீடியோ வைரல்!
இதையடுத்து வரும் 6ஆம் தேதி உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். வரும் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையில் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!
இந்திய அணியின் பிளேயிங் 11ல் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று விளையாடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் மட்டும் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய கபில் தேவின் சாதனையை அவர் முறியடிப்பார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 42 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். ஆனால், ரவீந்திர ஜடேஜா 29 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். அதோடு அனில் கும்ப்ளேயின் 41 விக்கெட்டுகள் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!
ஜடேஜா இன்னும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினால் கபில் தேவ் சாதனையை சமன் செய்வார். 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் அவரது சாதனையை முறியடித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!
இந்தியா ஒரு நாள் கிரிக்கெட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், ரவீந்திர ஜடேஜா, உம்ரான் மாலிக்.