Asianet News TamilAsianet News Tamil

டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!

இந்தியா டி20 உலகக் கோப்பையின் செய்த தவறை தற்போது நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly Said that India Must Select Yuzvendra Chahal in ICC Mens Cricket World Cup 2023
Author
First Published Jul 3, 2023, 3:08 PM IST

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது இலங்கை அணி 9ஆவது அணியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா செய்த தவறை 50 ஓவர் உலகக் கோப்பையிலும் செய்யக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

IND vs AFG ICC உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட்டு முன்பதிவு செய்வது எப்படி?

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் என்று விரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால், உலகக் கோப்பையை கைப்பற்ற யுஸ்வேந்திர சாஹல் முக்கிய வீரராக இருப்பார். முக்கியமான தொடர்களில் எல்லாம் இவர்கள் யாரும் இடம் பெறுவதில்லை. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கூட சிறப்பாக பந்து வீசியிருந்தார்.

Jonny Bairstow: அலெக்ஸ் கேரியின் புத்திசாலித்தனத்திற்கு அஸ்வின் பாராட்டு!

அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள திணறுவார்கள். தற்போது உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால் சஹாலை பயன்படுத்த வேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் கூட பியூஷ் சாவ்லா சிறப்பாக பந்து வீசியிருந்தார். ஆகையால், சஹாலை உலகக் கோப்பையில் பயன்படுத்துவது இந்திய அணிக்கு சிறப்பானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஹால் 121 விக்கெட்டுகளையும், 72 டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!

Follow Us:
Download App:
  • android
  • ios