இயான் பெல் ரன் அவுட்: அப்பீலை திரும்ப பெற்ற தோனியின் வீடியோ வைரல்!
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் இயான் பெல் ரன் அவுட் செய்யப்பட்டாலும், தோனி தனது அப்பீலை திரும்ப பெற்று பெல்லை திரும்ப ஆட வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்யப்பட்ட சம்பவம் தான் சீனியர் வீரர்களின் விவாதமாக மாறியுள்ளது. ஆஸி, வீரர் அலெக்ஸ் கேரி புத்திச்சாலித்தனமாக பேர்ஸ்டோவை ரன் அவுட் செய்துள்ளார் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!
இது ஒரு புறம் இருக்க, கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. அப்போது இஷாந்த் சர்மா வீசிய பந்தை இயான் பெல் பவுண்டரிக்கு திரும்பி விட்டார். ஆனால், பந்து பவுண்டரியை நெருங்கவிடாமல் பிரவீன் குமார் தடுத்து, பந்தை விக்கெட் கிப்பர் தோனிக்கு எறிந்தார்.
டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!
தோனி, பந்தை பிடித்து பீல்டரிடம் வீசினார். அந்த நேரம் பார்த்து, இயான் பென் மற்றும் இயான் மோர்கன் இருவரும் க்ரீஸ் லைனிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதன் காரணமாக பீல்டர் கையில் வைத்திருந்த பந்து கொண்டு பெய்ல்ஸை தட்டி விட்டார். அதன் பிறகு பந்து பவுண்டரியா இல்லையா என்று சரிபார்க்கப்பட்ட பிறகு பெல்லிற்கு அவுட் கொடுக்கப்பட்டது.
இந்திய அணியின் பவுலிங் மோசமாக உள்ளது; பாகிஸ்தானுக்கு 60 சதவிகித வாய்ப்பு உள்ளது – சயீத் அஜ்மல்!
இதையடுத்து டீ பிரேக் விடப்பட்டது. பிரேக் முடிந்து இந்திய வீரர்கள் வந்த பிறகு இயான் பெல்லும் பேட்டிங் ஆட வந்தார். அப்போது தான் தெரிந்தது. தோனி, தனது அப்பீலை திரும்ப பெற்றார். இதன் காரணமாக இயான் பெல் மறுபடியும் பேட்டிங் ஆடியுள்ளார். எனினும், அவர் குடுதலாக 15 ரன்கள் சேர்த்த நிலையில் 159 ரன்களில் ஆட்டமிழந்தார்.
IND vs AFG ICC உலகக் கோப்பை 2023 போட்டிக்கான டிக்கெட்டு முன்பதிவு செய்வது எப்படி?
இந்தப் போட்டியில் இந்தியா 319 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 0-4 என்ற கணக்கில் இழந்தது. தற்போது தோனியின் இந்த வீடியோ தான் ஜானி பேர்ஸ்டோவிற்கு ஆதரவாக வெளியாகி வைரலாகி வருகிறது. தோனியைப் போன்று தான் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் நடந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இந்த போட்டியில் இங்கிலாந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.