5ஆவது போட்டியில் தோற்று 2ஆவதாக வெளியேறிய சேலம் ஸ்பார்டன்ஸ்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து டிஎன்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

Dindigul Dragons Beat Salem Spartans by 7 Wickets Difference in  26th Match of TNPL 2023 at Tirunelveli

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் நடந்து முடிந்த போட்டிகளின் படி, லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் டிஎன்பிஎல் தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடந்த 26ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின.

டி20 உலகக் கோப்பை 2024 மீது குறி வைக்கும் டீம் இந்தியா; ஓய்வில்லாமல் விளையாட ரெடியா?

இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் எஸ் அரவிந்த் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் கவின் 25 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

சேலம் ஸ்பார்டன்ஸ் 160 ரன்கள் குவிப்பு: வெற்றிக்காக போராடும் திண்டுக்கல் டிராகன்ஸ்!

இதையடுத்து வந்த சன்னி சந்து அதிரடியாக ஆடினார்.  அவர் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் எடுக்கவே, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. பந்து வீச்சு தரப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி மற்றும் சுபோத் பதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?

இதையத்து 161 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடியது. இதில் விமல் குமார் 42 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சிவம் சிங் 8 ரன்களில் வெளியேற அடுத்து வந்த கேப்டன் பாபா இந்திரஜித் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 83 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸில் பீச்சில் வாலிபால் விளையாடிய இந்திய வீரர்கள்: மொபைலில் வீடியோ எடுத்த இஷான் கிஷான்!

இந்தப் போட்டியில் தோற்றதன் மூலமாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோற்ற நிலையில், டிஎன்பிஎல் தொடரிலிருந்து 2ஆவது அணியாக வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக பா11சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் முதல் அணியாக வெளியேறியது. எனினும் திருச்சி அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் செய்த தவறை இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் செய்யக் கூடாது: சவுரவ் கங்குலி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios