த்ரோவில் பந்து பேட்டில் பட்டு, பவுண்டரி சென்றால் ஓகே, இப்போ ஜானி பேர்ஸ்டோவுக்கு அவுட் இல்லையா?
ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவ் ஸ்டெம்பிங் (ரன் அவுட்) முறையில் ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதில், ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முக்கியமான தருணத்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ரன் அவுட் அல்லது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பேர்ஸ்டோவ்வை, ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு ஒரு புறம் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
5ஆவது போட்டியில் தோற்று 2ஆவதாக வெளியேறிய சேலம் ஸ்பார்டன்ஸ்!
போட்டிக்குப் பிறகு பேசிய பென் ஸ்டோக்ஸ், இப்படியொரு வெற்றி எங்களுக்கு தேவையில்லை தான் என்று கூறியிருந்தார். இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட், ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல மனிதர்களாக இருந்தால், பேர்ஸ்டோவ்வை ஆட்டமிழக்கச் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2024 மீது குறி வைக்கும் டீம் இந்தியா; ஓய்வில்லாமல் விளையாட ரெடியா?
இங்கிலாந்திற்கு ஆதரவாக அந்த நாட்டு பிரதமர் முதல் அனைவரும் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி தான் பேசி வருகின்றனர். உண்மையில், ஜானி பேர்ஸ்டோவ்வை ஆட்டமிழக்கச் செய்ததில் எந்த தவறும் இல்லை. தொடர்ந்து ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அப்போது, பீல்டர் த்ரோ செய்த போது, பந்தானது பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. அப்போது அதனை ஏற்றுக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் இப்போது மட்டும் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் பற்றி பேசலாமா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?