துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த தோனி: வைரலாகும் வீடியோ!
தோனி தனது செக்யூரிட்டு கார்டுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பர் மட்டுமின்றி தன்னை ஒரு பேட்ஸ்மேனாகவும் காட்டிய தோனி, சில நேரங்களில் பந்து வீசியுள்ளார்.
4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!
தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு முழுக்க முழுக்க ஐபிஎல் தொடர்களில் கவனம் செலுத்தினார்.
த்ரோவில் பந்து பேட்டில் பட்டு, பவுண்டரி சென்றால் ஓகே, இப்போ ஜானி பேர்ஸ்டோவுக்கு அவுட் இல்லையா?
இவ்வளவு ஏன், கடந்த மே மாதம் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதையடுத்து, தோனி தனது முழங்கால் காயத்திற்கு அறுவை செய்து கொண்டு, ராஞ்சியில் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
கபில் தேவ் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜடேஜா; வெஸ்ட் இண்டீஸ் ODI Squadல் இடம் பெறுவாரா?
இந்த நிலையில், தோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில், செக்யூரிட்டி கார்டுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். அதாவது, தோனியின் பண்ணை வீடு மிகப்பெரியது. அதில், தனது பண்ணை வீட்டின் செக்யூரிட்டி கார்டை வீட்டிற்குள் இருந்து வெளியில் கேட் உள்ள இடம் வரையில் தனது பைக்கில் ஏற்றி வந்துள்ளார். இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.
5ஆவது போட்டியில் தோற்று 2ஆவதாக வெளியேறிய சேலம் ஸ்பார்டன்ஸ்!