ரஹானே இறங்காதது தான் சென்னையின் தோல்விக்கு காரணமா?
சென்னை அணியின் தோல்விக்கு காரணம் ரஹானே இறங்காதது தான் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், கெய்க்வாட் 37 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு வந்த மொயீன் அலி 10 ரன்னும், ஜடேஜா 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த தோனி வழக்கம் போல் 2 சிக்ஸர்கள் அடித்தார். தொடக்க வீரரான டெவான் கான்வே 52 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். ஆனால், 16 பவுண்டரிகள் அடித்த அவர் ஒரேயொரு சிக்ஸர் மட்டுமே அடித்துள்ளார்.
சீனியர் - ஜூனியர் பாகுபாடு எல்லாம் சென்னை அணியில் கிடையாது - ரவீந்திர ஜடேஜா!
கடைசி வரை அஜிங்க்யா ரஹானே களமிறங்கவில்லை. இதுவரையில் நடந்த போட்டிகளில் 3ஆவதாக இறங்கிய ரஹானே தனக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஆடியுள்ளார். இதுவே சென்னையில் நடக்கும் போட்டி என்றால் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு சிறப்பாக ஆடக் கூடியவர். அப்படியிருக்கும் போது அவரை கடைசி வரை இறக்கியேவிடவில்லை.
இதுவே சென்னை அணிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மற்ற போட்டிகளை போன்று சென்னை அணியின் பவுலிங் சரியாக இல்லை. இது போன்ற காரணங்களால் தான் சென்னை அணி தோல்வி அடைந்ததாக சொல்லப்படுகிறது. ரசிகர்களும் ரஹானே இறங்காததற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மாமாவின் உதவியால் வளர்ந்த ஹிட்மேன்; ரோகித் சர்மா படைத்த சாதனைகள்!