பர்த்டே கிஃப்ட் கொடுப்பாரா டான் ரோகித் சர்மா: ஐபிஎல்லின் 1000ஆவது போட்டி மும்பை - ராஜஸ்தான் பலப்பரீட்சை!

மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள அனைவருமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MI vs RR Play in 1000th IPL Match today at Mumbai Wankhede Stadium

ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் 1000ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரையில் நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. என்னதான் மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் இருந்தாலும் இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டிகளில் மட்டுமே சிறப்பாக ஆடி மற்ற போட்டிகளில் கோட்டைவிடும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.

மாமாவின் உதவியால் வளர்ந்த ஹிட்மேன்; ரோகித் சர்மா படைத்த சாதனைகள்!

ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நிலையில், பந்து வீச்சிலும் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், டிரெண்ட் போல்ட் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகின்றனர்.

மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள்: ரோகித் சர்மாவின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம்!

இதுவரையில் விளையாடிய போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 26 போட்டிகளில் 14ல் மும்பையும், 12ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து அணிக்கும், ரசிகர்களுக்கும் பிறந்தநாள் டிரீட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios