மாமாவின் உதவியால் வளர்ந்த ஹிட்மேன்; ரோகித் சர்மா படைத்த சாதனைகள்!
ரோகித் சர்மா இன்று தனது 26ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் வரிசையில் இடம் பெற்றவர் ஹிட்மேன், டான் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா. விராட் கோலிக்கு முன்பே அணியில் இடம் பெற்றவர். கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ரோகித் சர்மா தான். தனது மாமாவின் உதவியின் மூலமாகவே கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். அப்போது சிறு வயதில் பால் பாக்கெட் மற்றும் பேப்பர் போட்டு வளர்ந்து வந்துள்ளார்.
மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள்: ரோகித் சர்மாவின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம்!
கடந்த 2006 ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட் ஆடிய ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியில் பல தடைகள் காத்திருந்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருந்த ரோகித் சர்மாவிற்கு டாஸ் போடுவதற்கு முன்பே காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி டெஸ்ட்டில் அறிமுகமானார்.
இதே போன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி அறிமுகமானார். ஆனால், நடுவரிசையில் தான் இறங்குவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில், அவரால் தனது திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதன் பிறகு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுத்தது எல்லாம் தோனி தான். அவர் தான் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்கினார். அதன் பிறகு ரோகித் சர்மாவுக்கு எல்லாம் ஹிட்டு தான். எந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ, அதே உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.
இதே போன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீங்காத இடம் பிடித்து தனது கேப்டன்ஷியின் கீழ் 5 டிராபி வென்று கொடுத்தார். 3 முறை இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்த நிலையில், இன்று ரோகித் சர்மா தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
DC vs SRH: டெல்லியில் ரசிகர்களுக்கிடையில் மோதல்: இருக்கைகள் சேதம்!
அதுமட்டுமின்றி வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் அதுதான் ரோகித் சர்மாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்பேக்ட் பிளேயர் எதிரொலி சர்ச்சை: சுனில் கவாஸ்கரை புகழ்வது போன்று தாக்கிய அம்பத்தி ராயுடு!