DC vs SRH: டெல்லியில் ரசிகர்களுக்கிடையில் மோதல்: இருக்கைகள் சேதம்!
டெல்லியில் நேற்று நடந்த போட்டியின் போது ரசிகர்களுக்கிடையில் அடிதடி சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக இருக்கைகள் சேதமடைந்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி (10), எய்டன் மார்க்ரம் (8), ஹாரி ப்ருக் (0) என்று நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்துல் சமாத் 28 ரன்களில் வெளியேறிய நிலையில், கடைசி நேரத்தில் ஹென்றிச் கிளாசென் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. இதில் கிளாசென் 27 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இம்பேக்ட் பிளேயர் எதிரொலி சர்ச்சை: சுனில் கவாஸ்கரை புகழ்வது போன்று தாக்கிய அம்பத்தி ராயுடு!
டெல்லி அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சில் மிட்செல் மார்ஷ் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே டேவிட் வார்னர் டக் அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பிலிப் சால்ட் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மணீஷ் பாண்டே 1 ரன்னில் வெளியேறினார். அதிரடியாக ஆடி 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்த மிட்செல் மார்ஷ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும், கடைசி வரை போராடிய அக்ஷர் படேல் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும், 20 ஓவர்கள்ல் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சென்னையோ, பஞ்சாப்போ இதை செய்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியும்: புள்ளி விவரம் ரிப்போர்ட்!
இந்த தோல்வியில் மூலமாக 8 போட்டிகளில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டி நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு கிடையில் அடிதடி சண்டை ஏற்பட்டது. இதில் ஸ்டேடியத்திலிருந்த இருக்கைகள் சேதமடைந்தது.