இம்பேக்ட் பிளேயர் எதிரொலி சர்ச்சை: சுனில் கவாஸ்கரை புகழ்வது போன்று தாக்கிய அம்பத்தி ராயுடு!
சுனில் கவாஸ்கர் அம்பத்தி ராயுடு குறித்து விமர்சித்திருந்த நிலையில், அம்பத்தி ராயுடு பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 202 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2ஆவது முறையாக சென்னை அணி ராஜஸ்தானிடம் தோற்றுள்ளது. அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தையும் இழந்தது.
சென்னையோ, பஞ்சாப்போ இதை செய்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியும்: புள்ளி விவரம் ரிப்போர்ட்!
இந்தப் போட்டியில் தொடக்க வீரர்கள் முதல் ஒவ்வொருவரும் சொதப்பிய நிலையில், இந்த தோல்வியை சென்னை அணி பெற்றது. இந்தப் போட்டியில் ஷிவம் துபே மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். எனினும், சென்னை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. இதில், இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
WTC Final: ரஹானேவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி!
அவர் டக் அவுட்டில் வெளியேறியதைத் தொடர்ந்து சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்தார். அதுமட்டுமின்றி டெல்லி அணியின் வீரர் பிருத்வி ஷா மாதிரி இவரும் நடையை கட்ட வேண்டியது தான் என்பது போன்று விமர்சித்திருந்தார். இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்தால் அடிக்க முடியாது. பிருத்வி ஷா போன்று டக் அவுட்டில் ராயுடு வெளியேறினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு மறைமுகம அம்பத்தி ராயுடு பதிலளித்துள்ளார். வாழ்க்கை என்றாலும் சரி, விளையாட்டு என்றாலும் சரி ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அப்போது தான் எல்லா பிரச்சனைகளும் தீரும். முடிவுகள் எப்போதும் நம் முயற்சிகளுக்கான வெளிப்பாடாக இருக்காது. எப்போதும் சிரித்துக் கொண்டே செயலில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். இது கவாஸ்கர் குறித்து கூறியதாக ரசிகர்கள் பலரும் கூறிய நிலையில் மற்றொரு டுவீட்டையும் பதிவிட்டுள்ளார்.
இது என்ன முட்டாள்த்தனம், கவாஸ்கரின் கருத்துக்கும் எனது டுவீட்டுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனது பீல்டிங்கைப் பொறுத்தவரையில் ஒரு வீரர் அவர் களமிறங்க வேண்டுமா, இல்லையா என்பதைப் பொறுத்து இல்லை என்று பதிவிட்டுள்ளார். எனினும், இந்த டூவிட் அவரை புகழ்ந்து பேசுவது போன்று தாக்கி பதிவிட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.