கிரிக்கெட் ஒரு சித்து விளையாட்டு: 7 ரன்களில் தோற்ற லக்னோ, இன்னிக்கு 2ஆவது அதிகமான ஸ்கோர் அடித்து சாதனை!
கடந்த போட்டிகளில் 7 ரன்களில் தோல்வியடைந்த லக்னோ நேற்றைய போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோர் அடித்து சாதனை படைத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
கடந்த 22 ஆம் தேதி லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான 30ஆவது ஐபிஎல் போட்டி லக்னோவில் நடந்தது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று முதலில் ஆடியது. அதன்படி அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
பின்னர் ஆடிய லக்னோ அணி ஓவருக்கு 6 ரன்கள் எடுத்திருந்தால் கூட கூடுதலாக 2,3 பவுண்டரி அடித்து வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தும் கூட லக்னோ அணி கடைசியாக 7 ரன்களில் தோல்வியடைந்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
பின்னர், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட லக்னோ அணிக்கும், பஞ்சாப் அணிக்கும் இடையிலான 38ஆவது போட்டி நேற்று மொஹாலி மைதானத்தில் நடந்தது. பஞ்சாப் அணியின் கோட்டையான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தவதற்குப் பதிலாக பந்து வீச்சு தேர்வு செய்துவிட்டார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதையடுத்து, முதலில் ஆடிய லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றின் 2ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் குவித்தது. 3ஆவது இடத்திலும் ஆர்சிபி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்த உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதர்வா டைட் மட்டும் 66 ரன்கள் அடித்துக் கொடுத்தார். மற்ற வீரர்களும் போராடியும் கடின இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
எப்படி லக்னோ அணி தனது தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்ததோ, அதே போன்று வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு செய்து விளையாட வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஒருவேளை சென்னை அணி டாஸ் வென்றால், அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தால் வெற்றி பெறலாம். இது இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.