மும்பை இந்தியன்ஸ் 10 வருடம் கேப்டன்: தான் பெற்றுக் கொடுத்த 5 டிராபியுடன் போட்டோஷூட் எடுத்த ரோகித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக பொறுப்பேற்று நாளையுடன் 10 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் வகையில் ரோகித் சர்மா தான் பெற்றுக் கொடுத்த டிராபியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
ரோகித் சர்மா போட்டோஷூட் - மும்பை இந்தியன்ஸ்
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் முதல் சீசன் முதல் மும்பை இந்தியன்ஸ் அணி இடம் பெற்று விளையாடி வருகிறது.
ரோகித் சர்மா போட்டோஷூட் - மும்பை இந்தியன்ஸ்
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் ஷான் பொல்லாக், ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிஜே பிராவோ, கெரான் போலார்டு ஆகியோர் கேப்டன்களாக இருந்துள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் தற்போது வரையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
ரோகித் சர்மா போட்டோஷூட் - மும்பை இந்தியன்ஸ்
இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் மும்பையில் ரோகித் சர்மா தான் பெற்றுக் கொடுத்த 5 டிராபியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
ரோகித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்
அது மட்டுமின்றி ரோகித் சர்மா நாளை தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதற்கு முன்னதாகவே இன்று தனது மனைவி ரித்திகாவுடன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6060 ரன்கள் எடுத்டுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். அதோடு, 539 பவுண்டரிகளும், 250 சிக்ஸர்களும் அடங்கும்.