Asianet News TamilAsianet News Tamil

மூலை முடுக்கெல்லாம் ரசிகர்கள்: ரோகித் சர்மாவின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாட்டம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
 

Fans Celebrated Mumbai Indians Skipper Rohit Sharma's cut out with milk anointing!
Author
First Published Apr 30, 2023, 10:54 AM IST | Last Updated Apr 30, 2023, 10:54 AM IST

டான், ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி பிறந்தவர் ரோகித் சர்மா. 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 83 இன்னிங்ஸில் 3379 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 243 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய டான் 236 இன்னிங்ஸில் 9825 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் 10 வருடம் கேப்டன்: தான் பெற்றுக் கொடுத்த 5 டிராபியுடன் போட்டோஷூட் எடுத்த ரோகித் சர்மா!

 

ரோகித் சர்மா இந்த 264 ரன்கள் சாதனையை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை. அதே போன்று 208 (நாட் அவுட்), 209 மற்றும் 264 என்று மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 3853 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்துள்ளார்.

DC vs SRH: டெல்லியில் ரசிகர்களுக்கிடையில் மோதல்: இருக்கைகள் சேதம்!

அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் 234 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6060 ரன்கள் எடுத்டுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடங்கும். அதோடு, 539 பவுண்டரிகளும், 250 சிக்ஸர்களும் அடங்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

இம்பேக்ட் பிளேயர் எதிரொலி சர்ச்சை: சுனில் கவாஸ்கரை புகழ்வது போன்று தாக்கிய அம்பத்தி ராயுடு!

 

 

இந்த நிலையில், ரோகித் சர்மா இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. உலகத்தில் மூலை முடுக்கெல்லாம் உள்ள ரசிகர்கள் ரோகித் சர்மாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios