சீனியர் - ஜூனியர் பாகுபாடு எல்லாம் சென்னை அணியில் கிடையாது - ரவீந்திர ஜடேஜா!
சென்னை அணியின் நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் எந்த அழுத்தமும் கிடையாது, சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடும் கிடையாது என்று சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 16ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் தங்களது வெற்றிக்காக போராடி வருகின்றன. நடப்பு சாம்பியன் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றுள்ளது. ஆம், புள்ளிப்பட்டியலில் ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், நாளடைவில் தனது இடத்தை இழந்தது. தற்போது மீண்டும் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 3ஆவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது இடத்திலும் உள்ளது.
சென்னையில் இன்று நடக்கும் 41ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் நிர்வாகத்தப் பொறுத்த வரையில் வீரர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுப்பதில்லை என்று ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். மேலும் அணியில் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.
மாமாவின் உதவியால் வளர்ந்த ஹிட்மேன்; ரோகித் சர்மா படைத்த சாதனைகள்!