Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: சிஎஸ்கே அணியில் இளம் வீரர் அறிமுகம்..! யார் இந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்..?

ஐபிஎல் 16வது சீசன் இன்று தொடங்கிய நிலையில், குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியில் அறிமுகமாகியுள்ள ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் குறித்து பார்ப்போம்.
 

who is this rajvardhan hangargekar who has debut for csk in ipl 2023
Author
First Published Mar 31, 2023, 8:03 PM IST

ஐபிஎல் 16வது சீசன் இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இன்று நடந்துவரும் முதல் போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆடும் லெவனுடன் சேர்த்து கூடுதல் வீரராக இம்பேக்ட் பிளேயர் என்று ஒருவரை எடுத்துக்கொள்ளலாம். அந்த வீரரை ஆட்டத்தின் போக்கை பொறுத்து ஆட்டத்தின் இடையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

அந்தவகையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்சன், ஜெயந்த் யாதவ், மோஹித் சர்மா, அபினவ் மனோகர், கேஎஸ் பரத் ஆகிய 5 வீரர்களில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்திக்கொள்ளலாம்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

சிஎஸ்கே அணி, துஷார் தேஷ்பாண்டே, சேனாபதி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து ஆகிய ஐவரில் ஒருவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தலாம். 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், முகமது ஷமி, ஜோஷுவா லிட்டில், யஷ் தயால், அல்ஸாரி ஜோசஃப்.

சிஎஸ்கே அணி: 

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பாதி ராயுடு, மொயின் அலி, ஷிவம் துபே, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

சிஎஸ்கே அணியின் ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரி காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியதால், 20 வயதான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் என்ற இளம் ஃபாஸ்ட் பவுலருக்கு ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் வெறும் ஃபாஸ்ட்பவுலர் மட்டுமல்ல; பேட்டிங்கும் ஆடக்கூடிய ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஆவார். 

IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி

கடந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் இந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை வாங்க சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் கடுமையாக போட்டி போட்டன. கடைசியில் சிஎஸ்கே அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியது. அடுத்த ஹர்திக் பாண்டியாவாக பார்க்கப்படும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு ஐபிஎல்லில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வளர்த்துவிடும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது அவருக்கு உண்மையாகவே அரிய வாய்ப்பு.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 8 டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடித்துள்ளார்; 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 4 முதல் தர போட்டிகளிலும், 13 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ள ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு கடந்த சீசன் முழுவதும் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. முகேஷ் சௌத்ரி ஆடாததால் ஹங்கர்கேகருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios