IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்
ஐபிஎல் 16வது சீசனில் ரவீந்திர ஜடேஜா ஆடுவதை பார்க்கத்தான் மிகவும் ஆவலாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இன்று தொடங்குகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாகவே தீவிரமாக தயாராகி அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.
இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால், கோப்பையுடன் ஓய்வுபெறும் எண்ணத்தில் உள்ளார் தோனி. சிஎஸ்கே அணியும் அவரை கோப்பையுடன் வழியனுப்பி வைக்கும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த சீசனின் தொடக்கத்தில் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தொடர் தோல்விகளின் விளைவாக ஜடேஜா கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதால் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்த ஜடேஜா அந்த சீசனின் கடைசி சில போட்டிகளிலிருந்து விலகினார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஆட ஜடேஜா விரும்பவில்லை. ஆனால் அவருடன் கேப்டன் தோனி மற்றும் சி.இ.ஒ காசி விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ளவைத்தனர்.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி செம ஃபார்மில் இருக்கிறார் ஜடேஜா. எனவே சிஎஸ்கே அணிக்காக அவர் எப்படி ஆடப்போகிறார் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், இந்த சீசனில் நான் பார்க்க ஆவலாக இருக்கும் வீரர் ரவீந்திர ஜடேஜா. அவர் சிஎஸ்கேவிற்காக எப்படி பேட்டிங் ஆடப்போகிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவர் பேட்டிங்கில் கொஞ்சம் மேலே இறக்கப்படுவார். பவுலிங்கிலும் அவரது 4 ஓவர்கள் மிக முக்கியமாக இருக்கும். இப்போதைய சூழலில் சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட சிறந்த ஆல்ரவுண்டர் யாருமே இல்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.