IPL 2023: அவங்கதான் இருக்குறதுலயே செம டீம்.. பாண்டிங்கே பார்த்து பயப்படும் பயங்கரமான அணி
ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச்சிறந்த மற்றும் வலுவான அணியாக இருப்பதாக டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் இன்று(மார்ச் 31) தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமான தயாரிப்புடன் அனைத்து அணிகளும் களமிறங்குகின்றன. இன்று அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே ஆகிய ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தயாராகிவருகின்றன. அதேபோல, இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதல் கோப்பையை எதிர்நோக்கி களமிறங்குகின்றன.
IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சீசனில் 2008ம் ஆண்டு கோப்பையை வென்று சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பின்னர் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்றும் கூட, அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்ததால், இந்த முறை கோப்பையை வெல்லும் உறுதியுடன் வலுவான அணியுடன் களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த சீசனின் வலுவான அணி குறித்து பேசிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அரிதினும் அரிதாகத்தான் ஐபில்லில் ஒரு அணி சீசனின் தொடக்கத்திலிருந்து இறுதி வரை முழுவதுமாகவே ஆதிக்கம் செலுத்தும். குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த சீசனில் அபாரமாக ஆடியது. புதிய அணியாக இறங்கி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக மிகச்சிறந்த அணி. கடந்த சீசனுக்கான ஏலம் முடிந்ததுமே, ராஜஸ்தான் அணி வலுவாக இருப்பதாக நான் கூறியிருந்தேன். அந்த அணியில் இருக்கும் வீரர்களையும், அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் நினைக்கவே வியப்பாக இருக்கிறது.
ராஜஸ்தான் அணி வலுவாக திகழ்கிறது. ஆனால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கணிப்பதெல்லாம் மிகக்கடினமான விஷயம். ஆனால் அணிகளின் வலிமையை பார்க்கையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் மிகவும் வலிமையான அணியாக திகழ்கிறது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.
IPL 2023: சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்..! ஒரேமாதிரி பலம்.. ஒரேமாதிரி பலவீனம்
பயிற்சியாளர் குமார் சங்கக்கராவின் வழிகாட்டுதலில் சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக் என அனுபவமும் இளமையும் கலந்த அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஷ்வின், சாஹல் ஆகிய 2 சீனியர் ஸ்பின்னர்கள் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்கள் டிரெண்ட் போல்ட், குல்தீப் சென்னுடன் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரும் இருக்கிறார். எனவே பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணியாக திகழ்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.