IPL 2023: முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனின் முதல் போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் நாளை (மார்ச் 31) தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும், 4 முறை சாம்பியன் சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த முதல் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
IPL 2023: சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்..! ஒரேமாதிரி பலம்.. ஒரேமாதிரி பலவீனம்
ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிமுக சீசனிலேயே முதல் கோப்பையை வென்று சாதனை படைத்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கே ஆகிய இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த ஒன்றுக்கொன்று சளைக்காத அணிகளாகும். இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி:
டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்ஷனா.
IPL 2023: ரோஹித் சர்மா அப்பவே அப்படி.. இப்ப சொல்லவா வேணும்..! அனில் கும்ப்ளே புகழாரம்
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, சாய் கிஷோர், யஷ் தயால்.