இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 போட்டி 2 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது.
அதைத்தொடர்ந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. டிரினிடாட்டில் நடந்த முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க - T20 WC-க்கு சரியான இந்திய அணியை செலக்ட் பண்ணுப்பா ஷர்மா! ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணு! ஸ்ரீகாந்த் அட்வைஸ்
2வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸ்&நெவிஸில் இன்று இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டியது. 7.30 மணிக்கு டாஸ் போட்டு 8 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி இது. ஆனால் டிரினிடாட் ஏர்ப்போர்ட்டில் இருந்து செயிண்ட் கிட்ஸ்&நெவிஸுக்கு க்கு இந்திய அணியின் லக்கேஜ் குறித்த நேரத்தில் வரவில்லை.
அதனால் 2வது டி20 போட்டி 2 மணி நேரம் தாமதமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 10 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என வலுவான முன்னிலை பெறும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்து, தொடரை வெல்லும் வாய்ப்பை பலமாக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.
