MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

தினேஷ் கார்த்திக் நல்ல வேளையாக இந்தியாவில் பிறந்தார்; அவர் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட ஆடியிருக்க முடியாது பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.  

2 Min read
Author : karthikeyan V
Published : Aug 01 2022, 06:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்திய அணியில் 2004ம் ஆண்டே அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த விக்கெட்கீப்பர்- பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். அதே காலக்கட்டத்தில் தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தனக்கான இடத்தை பிடித்து கேப்டன்சியையும் கைப்பற்றிவிட்டதால் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஆனாலும் அவ்வப்போது இந்திய அணிக்கு ஆட கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக ஆடி அசத்திவிடுவார். 2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதன்விளைவாக இந்திய அணியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், பின்னர் மீண்டும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

36

ஐபிஎல் 15வது சீசனில் ஆர்சிபி அணிக்காக ஆடிய தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி ஆர்சிபி அணிக்கு பல போட்டிகளை அதிரடியாக ஆடி முடித்து கொடுத்து ஃபினிஷராக அனைவரையும் கவர்ந்தார். அதன்விளைவாக 37 வயதில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

46

இந்த முறை இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை, அருமையாக பயன்படுத்தி அபாரமாக பேட்டிங் ஆடி தன்னை ஒரு சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டார். டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில், தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.
 

56

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 பந்தில் 41 ரன்கள் அடித்து தினேஷ் கார்த்திக் சிறப்பாக முடித்து கொடுத்ததால் தான் இந்திய அணி 190 ரன்கள் என்ற பெரிய இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - T20 WC-க்கு சரியான இந்திய அணியை செலக்ட் பண்ணுப்பா ஷர்மா! ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணு! ஸ்ரீகாந்த் அட்வைஸ்

66

இந்நிலையில், 37 வயதில் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து அபாரமாக பேட்டிங் ஆடிவரும் தினேஷ் கார்த்திக் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், அதிர்ஷ்டவசமாக தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்துவிட்டார். பாகிஸ்தானில் பிறந்திருந்தால் இந்த வயதில் (37) உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட ஆடியிருக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார் சல்மான் பட்.

About the Author

KV
karthikeyan V
தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட் அணி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!
Recommended image2
டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வெள்ளை டிரஸ் ஏன்? இந்த சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா?
Recommended image3
IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved