வாஷிக்கு ஆப்பு வச்ச நடுவர்: ஆஸி பிளேயர்ஸ் ஹேப்பி அண்ணாச்சி!
Washington Sundar Dismissal by DRS Controversy in Sydney Test : சிட்னி டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு நடுவர் கொடுத்த தவறான முடிவு இப்போது சர்ச்சையாகி வருகிறது.
சிட்னி டெஸ்டில் நடுவரின் தவறான முடிவு: வாஷிங்டன் சுந்தர் அவுட்!
Washington Sundar Dismissal by DRS Controversy in Sydney Test : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024-25 டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 1 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்த பார்டர் கவாஸர் போட்டியில் நடுவர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். மைதானத்தில் நடுவர்கள் எடுத்த சில முடிவுகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன. சிட்னி டெஸ்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
வாஷிங்டன் சுந்தரின் விக்கெட்டைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. நடுவரின் முடிவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய லெக் சைட் பந்தை வாஷிங்டன் சுந்தர் அடிக்க முயன்றார். பந்து கையுறைக்கு அருகில் சென்று விக்கெட் கீப்பரிடம் சென்றது. கள நடுவர் முடிவை மூன்றாவது நடுவருக்கு விட்டார். மூன்றாவது நடுவர், வாஷிங்டன் சுந்தரை அவுட் என்று அறிவித்தார். இதனால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
முதல் இன்னிங்ஸின் 66வது ஓவரில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்து வீச வந்தார். ஓவரின் கடைசி பந்தில், கம்மின்ஸ் லெக் சைடில் பந்து வீசினார். பந்து வாஷிங்டன் சுந்தரின் குளோஸ் அருகில் சென்று அலெக்ஸ் கேரியிடம் சென்றது. கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. முடிவை மூன்றாவது நடுவருக்கு விட்டார். மூன்றாவது நடுவர் ஸ்னீக்கோ மீட்டரைப் பார்த்து அவுட் கொடுத்தார். ஆனால், ஸ்னீக்கோ மீட்டரில் பந்துக்கும் பேட்டுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரிந்தது.
ரோகித் சர்மா நீக்கப்பட்டாரா? இல்லை அவரே ஒதுங்கினாரா? உண்மை என்ன? பும்ரா விளக்கம்!
இதே போன்று தான் மெல்போர்னில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் நடந்தது. அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 84 ரன்கள் எடுத்திருந்தார். 7ஆவதாக அவர் தனது விக்கெட்டை பறிகொடுக்க இந்தப் போட்டியில் இந்தியா 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நடுவரின் தொடர் தவறான முடிவுகளால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நடுவரை 'ஏமாற்றுக்காரர்' என்று அழைத்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாகவும் நடுவர்கள் இந்தியாவுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடுவர்கள் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2008 சிட்னி டெஸ்டில் நடந்த மங்கி கேட் சர்ச்சையிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. பின்னர் நடுவர் தனது இரண்டு தவறுகளை ஒப்புக்கொண்டார். இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அவுட் ஆனார். ஆனால், நடுவர் ஸ்டீவ் பக்னர் அவரை நாட் அவுட் என்று அறிவித்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டது ரீப்ளேயில் தெரிந்தது. அப்போது சைமண்ட்ஸ் 30 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். பக்னரின் தவறான முடிவால், சைமண்ட்ஸ் 161 ரன்கள் எடுத்தார். இந்தியா போட்டியில் தோல்வியடைந்தது.
ராகுல் டிராவிட்டையும் விட்டு வைக்காத பக்னர்
ஸ்டீவ் பக்னர் இதோடு நிற்கவில்லை. டெஸ்ட் போட்டியின் 5ஆவது நாளில் ராகுல் டிராவிட்டையும் இதேபோல் அவுட் கொடுத்தார். சிட்னி டெஸ்டின் கடைசி நாளில் 72 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நடந்தது. இந்தியாவுக்கு 333 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 34 ஓவர்கள் வரை இந்தியா மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் டிராவிட் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், பக்னர் டிராவிட்டை அவுட் கொடுத்தார். பந்து பேட்டில் படவில்லை. பின்புற பேடில் பட்டது. நடுவரின் இந்த இரண்டு முடிவுகளும் போட்டியின் போக்கையே மாற்றிவிட்டன. இந்தியா தோல்வியடைந்தது.