அச்சு அசலாய் ஜாகீர் கான் போல் பவுலிங்; சச்சினை கவர்ந்த 10 வயது சுசீலா மீனா; யார் இந்த 'குட்டி' ஜாகீர்கான்?

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சுசீலா மீனா, ஜாகீர் கான் போல் பவுலிங் செய்கிறார். அந்த சிறுமி யார்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

Do you know who Sushila Meena who bowls like Zaheer Khan? ray

ஜாகீர் கான் போல் பந்து வீசும் சிறுமி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பாஸ்ட் பவுலர் ஜாகீர் கான். 'யார்க்கர் கிங்' என அழைக்கப்படும் ஜாகீர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஓடிஐ போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பல்வேறு முக்கியமான போட்டிகளில் அணிக்கு வெற்றியைத் தேடி வந்த ஜாகீர் கான் பந்துவீசுவதை பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

ஸ்டெம்புக்கு பின்னால் இருந்து ஓடி வந்து குதித்து பந்துவீசும் அவரது தனித்துவமான ஸ்டைலுகே என்றே ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில்,  ஜாகீர் கானை போலவே அப்படியே அச்சு அசலாய் பந்துவீசும் 10 சிறுமி ஒருவர் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார். அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயதான சுசீலா மீனா என்ற சிறுமி தான் ஜாகீர் கானை போலவே ஓடி வந்து குதித்து பவுலிங் செய்கிறார்.

யார் இந்த சுசீலா மீனா?

இந்த சிறுமி பவுலிங் போடும் வீடியோ வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து 'அடடே! இந்த சிறுமி ஜாகீர் கான் உங்களை போலவே பந்துவீசுகிறார்' என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஜாகீர் கான், ''ஆமாம்.. சச்சின் நான் ஏற்றுக்கொள்கிறேன்.சிறுமியின் பவுலிங் ஆக்சன் ஸ்முத்தாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது'' என்றார்.

இதன்பிறகு சிறுமி சுசீலா மீனா உலகம் முழுவதும் வைரலாகி விட்டார். கிரிக்கெட் கடவுள் சச்சினையே கவர்ந்த இந்த குட்டி சிறுமி யார் என்பது குறித்து பார்ப்போம். 10 வயதான சுசீலா மீனா ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். 1ம் வகுப்பு படிக்கும்போதே சுசீலா மீனாவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். 

Do you know who Sushila Meena who bowls like Zaheer Khan? ray

சச்சினை யாரென்று தெரியாது

சுசீலா மட்டுமின்றி ஏராளமான மாணவர்கள் சிறப்பாக விளையாடியதால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அங்கு படிக்கும் மாணவர்களை நன்கு விளையாடும்படி ஊக்குவித்து பயிற்சி கொடுத்து வருகின்றனர். இந்த பயிற்சியின் பலனாக சிறு வயதிலேயே பவுலிங் திறமையையே கற்றுக்கொண்ட சுசீலா இப்போது உலகப்புகழ்பெற்று விட்டார். ஆனால் சச்சினால் புகழ்பெற்ற இந்த சிறுமி சச்சின் டெண்டுல்கர் தனக்கு யார் என்றே தெரியாது; அவரை நான் பார்த்தது கூட இல்லை என்று கூறுகிறார். 

வீட்டில் டிவி இல்லை

ஏனெனில் சுசீலா மீனாவின் குடும்பம் ஒரு குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறது. அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். மேலும் சிறுமி சுசீலா மீனாவின் வீட்டில் டிவியே இல்லை. தாங்கள் கூலி வேலை பார்த்தாலும், மகளை பெரிய ஆளாக்கி விட வேண்டும் என பெருமிதத்துடன் கூறுகின்றனர் சுசீலாவின் பெற்றோர். சிலர் சுசீலாவின் பெற்றோரை தேடிச் சென்று பாராட்டுகின்றனர். ஆனால் ஒரு சிலர் ''ஏன் பெண் பிள்ளையை விளையாட விடுகிறாய். அவளை வீட்டு வேலை செய்ய சொல்வதில்லையா?'' என்று கூறுவதாக சுசீலாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சுசீலா படிக்கும் பள்ளி வைரலாவது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படிக்கும் ஒரு பேட்டிங் செய்யும் வீடியோ வைரலானது. இதனால் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கமும், பயிற்சியும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அரசும், மாவட்ட நிர்வகாகமும் ஏதும் செய்யவில்லை என்று ஊர் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios