கேப்டன் பும்ரா செய்த தவறு; கடினமான பிட்ச்சில் தடுமாறிய பேட்ஸ்மேன்கள்; 185 ரன்களில் சுருண்டது இந்தியா!


சிட்னி 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

India were all out for 185 in the 5th Test in Sydney ray

5வது டெஸ்ட் போட்டி 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இந்தியா, 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. 

பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பில் நீடிக்கவும் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்ற நிலையில் இந்தியா இறங்கியது. இந்த தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி கேப்டன்சியிலும் சொதப்பி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஜஸ்பிரித் பும்ராவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்திய கேப்டன் பும்ரா

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் காயம் காரணமாக விலகியதால் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றார். ஆஸ்திரேலிய தரப்பில் மார்ஷ் நீக்கப்பட்டதால் ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் இறங்கினார்கள். 

மேகமூட்டமான சீதோஷ்ண நிலவியதால் அதை ஆஸ்திரேலிய பவுலர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். தொடக்கம் முதலே சரியான லைன் அண்ட் லென்த்தில் பந்து வீசியதால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். கே.எல்.ராகுல் வெறும் 4 ரன்னில் ஸ்டார்க் பந்தில் கான்ஸ்டாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலியின் பலவீனம் 

ஜெய்ஸ்வாலும் 10 ரன்னில் போலண்ட் வீசிய சூப்பர் பந்தில் வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். இதன்பிறகு களம் கண்ட விராட் கோலி தொடக்கத்தில் அதிகமான அவுட் சைடு ஆப் வீசிய பந்துகளை தவிர்த்தார். மறுபக்கம் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் நிதானமாக ரன்களை சேகரித்தார். இவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 40 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடியபோது சுப்மன் கில் (20 ரன்) தேவையில்லாமல் லயன் பந்தில் இறங்கி ஸ்லீப்பில் கேட்ச் ஆனார்.

India were all out for 185 in the 5th Test in Sydney ray

இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் 17 ரன்கள் எடுத்திருந்தபோது போலண்ட் வீசிய அவுட் சைட் ஆப் சைடு பந்தை அடிக்கப்போய் வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு ரிஷப் பண்ட், ஜடேஜா இணைந்து ஓரளவு நன்றாக விளையாடினார்கள். ஸ்கோர் 120 ஆக உயர்ந்தபோது நன்றாக விளையாடிய   ரிஷப் பண்ட் (40 ரன்) தேவையில்லாமல் போலண்ட் பந்தில் ஷாட் அடித்து அவுட் ஆனார்.

இந்தியா 185 ரன்னுக்கு ஆல் அவுட் 

பின்பு களம் கண்ட நிதிஷ் குமார் ரெட்டி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் போலண்ட் பந்தில் கேட்ச் ஆனார். இதனைத் தொடர்ந்து விக்கெடுகள் அடுத்தடுத்து விழுந்தன. ஜடேஜா (26 ரன்), வாஷிங்டன் சுந்தர் (14 ரன்) பிரசித் கிருஷ்ணா (3 ரன்) வரிசையாக ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேப்டன் பும்ரா 3 பவுண்டரி, 1 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 185 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சாம் காண்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா களமிறங்கினார்கள். பும்ரா இன் ஸ்விங், அவுட் ஸ்விங் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார். அதன் பலனாக உஸ்மான் கவாஜா 2 ரன்னில் பும்ரா பந்தில் சிராஜிடம் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து 176 ரன்கள் பின் தங்கியுள்ளது. நாளை 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

பும்ரா செய்த பெரும் தவறு 

இன்று காலை முதல் மேகமூட்டமான சூழ்நிலை நிலவிய நிலையில், பும்ரா டாஸ் ஜெயித்து பேட்டிங் தேர்வு செய்தது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிட்ச்சும் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச்சில் பந்துகள் நன்றாக பவுன்ஸ் ஆகின. சில பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகின. 

இதனால் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. ரிஷப் பண்ட் ஹெட்மெட்டில், உடம்பில் அடி வாங்கி தான்  40 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா பீல்டிங் தேர்வு செய்திருந்தால் ஆஸ்திரேலிய அணியையும் இதை விட குறைவான ரன்களில் சுருட்டி இருக்கலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios