உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுப்பவர்களின் பட்டியலில் ரோகித் சர்மா தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இன்னும், 40 நாட்கள் உள்ள நிலையில், இந்திய வீரர்கள் உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்கள். இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்த கங்குலி: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை!

கடந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த 2011 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு எந்த ஐசிசி டிராபியையும் இந்திய அணி கைப்பற்றவில்லை.

சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!

இந்த நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுப்பது யார் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அதிக ரன்கள் எடுப்பவர்களின் பட்டியலில் நிறைய ஓபனிங் வீரர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டுமென்றால், ரோகித் சர்மாவைத் தான் நான் தேர்வு செய்வேன். உலகக் கோப்பை தொடர்களில் ரோகித் சர்மாவின் ஆற்றல் மற்றும் செயல்திறன் மிகவும் அதிகரிக்கும்.

சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

இந்த முறை அவர் கேப்டனாகவும் இருக்கிறார். ஆதலால், பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திடுவார். கடந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா, 5 சதங்கள் உள்பட 648 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி போட்டியில் 199 ரன்கள் குவித்து பீல்டிங்கும் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்!