உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்த கங்குலி: சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை!
உலகக் கோப்பை தொடருக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியை முன்னாள் இந்திய அணி வீரர் சவுரவ் கங்குலி தேர்வு செய்துள்ளார்.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில், உலகக் கோப்பைக்கான டிராபியானது இன்னும் ஊர் ஊராக சென்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர்.
சகோதரியின் திருமணத்தின் போது கண்ணீர்விட்டு அழுத இலங்கை கிரிக்கெட்டர் வணிந்து ஹசரங்கா!
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், இந்தியா உலகக் கோப்பையில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்தியா, ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது. அதோடு, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.
சர்வதேச நாய்கள் தினம்: செல்லப்பிராணிகளை அதிகம் நேசிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். இதிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில், பிசிசிஐ முன்னாள் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி உலகக் கோப்பைக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார்.
பயிற்சி போட்டியில் 199 ரன்கள் குவித்து பீல்டிங்கும் செய்த ஷ்ரேயாஸ் ஐயர்!
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ். ஆனால், இதில், யுஸ்வேந்திர சஹால், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் இடம் பெறவில்லை.