Virat Kohli Gym Work Out Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் விராட் கோலி – வைரலாகும் வீடியோ!
ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஓய்வில் இருக்கும் விராட் கோலி அடுத்ததாக ஆசிய கோப்பை 2023 தொடர் மற்றும் உலகக் கோப்பை தொடருக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
World Cup 2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தொடங்கியது: டிக்கெட் வெளியீடு, அறிவிப்பு வரும்!
இந்த மாதம் 30 ஆம் தேதி ஆசிய கோப்பை 2023 தொட தொடர் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள், ஆப்கானிஸ்தான் என்று மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த ஆசிய கோப்பை 2023 தொடர் நடத்தப்படுகிறது. செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
Independence Day 2023: ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்த எம்.எஸ்.தோனி!
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகி வரும் விராட் கோலி ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!
அதில், விடுமுறை நாளாக இருந்தாலும் சரி, இலக்கை அடைய ஓட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். Treadmillல்லில் வேகமாக ஓடும் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் 23 ஆம் தேதி பெங்களூருவில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைய உள்ளார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?