Asianet News TamilAsianet News Tamil

World Cup 2023: உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தொடங்கியது: டிக்கெட் வெளியீடு, அறிவிப்பு வரும்!

உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்னும், 10 நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

Ticket registration for upcoming 2023 World Cup has begins on the ICC Website
Author
First Published Aug 15, 2023, 6:45 PM IST

ஆசிய கோப்பைத் தொடரைத் தொடர்ந்து ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் போட்டியானது அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், தர்மசாலா, டெல்லி என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடக்கிறது.

Independence Day 2023: ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் தேசிய கொடியை ஏற்றி வைத்த எம்.எஸ்.தோனி!

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 15 ஆம் தேதி நவராத்திரி விழா என்பதால், அன்று நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது அக்டோபர் 14 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!

இதே போன்று சில போட்டிகளும் மாற்றப்பட்டது. வரும் 25 ஆம் தேதி முதல் உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான டிக்கெட் பதிவு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது. அதன்படி, ஐசிசி இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், இ-மெயில், மொபைல் போன், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?

அப்படி பதிவு செய்வதன் மூலமாக, ஐசிசி டிக்கெட் விற்பனை தொடங்கியதும், முதலில் உங்களுக்கு டிக்கெட் விற்பனை, பரிசு தொகை, அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதோடு, நீங்கள் எந்த போட்டிக்கான டிக்கெட் பெற விரும்புகிறீர்களோ அதனை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். அதாவது, வரிசையாக 10 அணிகளும், 10 மைதானங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் விரும்பும் போட்டி மற்றும் அணியை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!

Follow Us:
Download App:
  • android
  • ios