Asianet News TamilAsianet News Tamil

MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் எம்.எஸ். தோனி ஓய்வு பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

On this August 15, 2020 MS Dhoni announced his Retirement from international cricket
Author
First Published Aug 15, 2023, 1:06 PM IST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து வளர்ந்த எம்.எஸ்.தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார்.

77th Independence Day: இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு எப்படி வாழ்த்து தெரிவித்தன?

ஆரம்பத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி அதன் பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடி வந்த தோனி, தனது திறமையால் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறி கூல் கேப்டனாக வளர்ந்தார். ஸ்டெம்பிங், கேட்ச், ரெவியூ எடுப்பதில் கில்லாடியாக திகழ்ந்தார். நடுவருக்கு கற்றுக் கொடுக்கும் அளவிற்கு தோனியின் டிஆர்.எஸ் முடிவு இருக்கும் என்று சொன்னால் மிகையாகாது.

Virat Kohli New House: 8 ஏக்கரில் பண்ணை வீடு கட்டும் பணியை தொடங்கிய விராத் கோலி அனுஷ்கா சர்மா!

கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கைப்பற்றியது. இதற்கிடையில் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின், சேவாக் என்று எத்தனையோ கேப்டன்கள் மாறியிருந்தாலும், தோனி வந்த பிறகு தான் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்ற கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் – கண்காணித்த ரிஷப் பண்ட்!

அதுமட்டுமின்றி 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையையும் கைப்பற்றியது. இப்படி பல சாதனைகளை படைத்த தோனி இந்திய அணிக்கு சிம்ம பொப்பனமாக திகழ்ந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ரன் அவுட்டானார். அதே போன்று கடைசி சர்வதேச போட்டியிலும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Ravindra Jadeja Statue Pictures: சிலையோடு சிலையாக போஸ் கொடுத்த ரவீந்திர ஜடேஜா: வைரலாகும் புகைப்படம்!

Follow Us:
Download App:
  • android
  • ios