இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10ஆவது முறையாக தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி மரியாதை செய்தனர்.
வீட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட முகமது ஷமி: சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செய்தார். முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பின்னர் 3ஆவது முறையாக தேசியக் கொடியேற்றினார்.
தளபதி 68 படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கும் தோனி? அண்ணனா? வில்லனா?
சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடு தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்றும், அவரவர் டுவிட்டர் டிஸ்பிளே பிக்ஸரில் தேசியக் கொடி இடம் பெறும் வகையிலும் மாற்றி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகு பிசிசிஐ, ரோகித் சர்மா, ஆகாஷ் சோப்ரா என்று பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் டிஸ்பிளே பிக்ஷர் புகைப்படத்திற்கு பதிலாக தேசியக் கொடியின் புகைப்படத்தை இடம் பெறச் செய்தனர்.
MS Dhoni: தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு: ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் போட்டியில் தோனி ரன் அவுட்!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது வீட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டுள்ளார். இதே போன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஷமியைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
77th Independence Day: இந்திய விளையாட்டு அமைப்புகள் நாட்டு மக்களுக்கு எப்படி வாழ்த்து தெரிவித்தன?
யுவராஜ் சிங், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன், சுரேஷ் ரெய்னா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகர் தவான், உமேஷ் யாதவ், வாசீம் ஜாஃபர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹர்ஷா போக்லே என்று பிரபலங்கள் பலரும் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
