IPL 2023: ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி செய்யும் விராட் கோலி: ஃபயர் எமோஜி தெறிக்கவிட்ட அனுஷ்கா சர்மா!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி இன்று நடக்க உள்ள நிலையில் விராட் கோலி ஜிம்மில் கடினமாக
உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை ஃபிட்டாகவும், கட்டுக் கோப்பாகவும் வைத்திருக்கவே விரும்புவார்கள். அதிலேயும் டயட் பின்பற்றுவார்கள். அதற்காக அவர்கள் அதிகம் மெனக்கெடுவார்கள். அதுமட்டுமின்றி கட்டுக்கோப்பாக இருக்கும் உடல்களில் டாட்டூவும் போட்டுக் கொள்வார்கள். அப்படி டாட்டூ, உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் முக்கியமானவராக இருப்பவர் விராட் கோலி. தற்போது ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்து வருகிறார். நேற்று பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் சிடிஆர் ரெஸ்டாரண்டிற்கு தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு கூடிய ரசிகர்கள் அவர்களை வெளியில் செல்ல விடாமல் ஆர்சிபி ஆர்சிபி ஆர்சிபி என்று கோஷமிட்டனர். அதன் பிறகு பாதுகாவலர்கள் உதவியுடன் காரில் ஏறிச் சென்றனர்.
IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 32ஆவது போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையில் நேற்று இரவு, ஜிம்மில் கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டார். அவர் ஜிம்மில் அதிகளவில் பளுதூக்குவைக் கண்ட அவரது மனைவி வெறும் ஃபயர் எமோஜியை பதிவிட்டுள்ளார். அதாவது, அவர் தீயாய் உடற்பயிற்சி செய்கிறார் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.