MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மிடில் ஸ்டெம்பை உடைத்து உடைத்து மும்பையை கதி கலங்க வைத்த யார்க்கர் கிங் அர்ஷ்தீப் சிங்கால் பஞ்சாப் வெற்றி!

மிடில் ஸ்டெம்பை உடைத்து உடைத்து மும்பையை கதி கலங்க வைத்த யார்க்கர் கிங் அர்ஷ்தீப் சிங்கால் பஞ்சாப் வெற்றி!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீ சிங், யார்க்கரா வீசி இரண்டு முறை மிடில் ஸ்டெம்பை உடைத்து உடைத்து பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 23 2023, 09:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 31 ஆவது போட்டி நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. மும்பை தனது கோட்டை என்று சொல்லிக் கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீசியது

28
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒவ்வொருவரும் கடைசி வரை அதிரடி காட்ட, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார்.

38
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். 

48
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.

58
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 

68
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார். ஆனால், அப்போது மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.

78
மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

மிடில் ஸ்டெம்பை உடைத்த அர்ஷ்தீப் சிங்

அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். 5ஆவது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 6ஆவது பந்தில் மட்டுமே ஒரு ரன் எடுக்கப்பட, கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

88
அர்ஷ்தீப் சிங்

அர்ஷ்தீப் சிங்

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடிய 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
Recommended image2
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?
Recommended image3
IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved