IPL 2023: வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடிய சச்சின்!
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கர் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். சச்சினின் தந்தை ரமேஷ் மராத்தி மொழி நாவலாசிரியர் மற்றும் கவிஞர். தாய், ரஜினி இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிந்தார். சிறு வயது முதலே டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு சாராதா ஆஸிரமத்திற்கு சென்ற பிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். அச்ரேக்கர் அவருக்கு கிரிக்கெட் விளையாட பயிற்சி கொடுத்துள்ளார்.
IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!
ஆரம்பத்தில் ஸ்டெம்பின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கச்சிதமாக பந்து வீசி ஸ்டெம்பை விழ வைத்துவிட்டால் அந்த நாணயத்தை எடுத்துக் கொள்ளலாம். அப்படி அவர் 13 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1984ல், 11 வயதில், ஜான் பிரைட் கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் போது கங்கா கிரிக்கெட் லீக்கில் அறிமுகமானார். தனது 14ஆவது வயதில் MRF பேஸ் அறக்கட்டளையில் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளராக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், அதில் அவரது பயிற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அவரை பேட்டிங் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி இம்ரான் கானுக்கு பதிலாக சப்ஸ்டிட்டியூட்டாக பிரபோர்ன் மைதானத்தில் நடந்த கண்காட்சி போட்டியில் கலந்து கொண்டார். அதன் பிறகு ஒரு சில மாதங்களுக்கு பிறகு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர், டெண்டுல்கருக்கு ஒரு ஜோடி லைட்வெயிட் பேடுகளைக் கொடுத்து, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் சிறந்த ஜூனியர் கிரிக்கெட் வீரர் விருதைப் பெறாததற்காக வருத்தப்பட வேண்டாம் என்று கூறினார்.
Desert Storm: 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆஸ்திரேலியாவை ஓட ஓட விரட்டிய சச்சின் (143 ரன்கள்)!
கடந்த 1987 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிய போது டெண்டுல்கர் பந்து வீச்சாளராக விளையாடினார். கடந்த 1988 ஆம் ஆண்டு, சாரதாஷ்ரமத்திற்காக விளையாடும்போது, செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு எதிரான லார்ட் ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டெண்டுல்கரும், வினோத் காம்ப்லியும் இணைந்து 664 ரன்கள் எடுத்தனர். இதில் டெண்டுல்கர் 326 (நாட் அவுட்) ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் 1,000 ரன்களுக்கு மேல் அடித்தார்.
அதன் பிறகு தான் சச்சின் டெண்டுல்கர் தனது 14ஆவது வயதில் ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமானார். இப்படி பல போராட்டங்களை கடந்து வந்த சச்சின் டெண்டுல்கர் நாளை தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.