Desert Storm: 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆஸ்திரேலியாவை ஓட ஓட விரட்டிய சச்சின் (143 ரன்கள்)!
25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட் என்று கூட சொல்லலாம். கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் சரி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் சரி, அவர்களைக் கண்ட போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அது நம்ம மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவர் செய்த சாதனைகள் இன்னும் தகர்க்க முடியாமல் அப்படியே இருக்கிறது. அதில் ஒன்று தான் 100 சதங்கள்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ஐக்கிர அரபு அமீரகங்களின் தலைநகரான சார்ஜாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கோகோ-கோலா டிராபி ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் 6ஆவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 284 ரன்கள் எடுத்தது.
தோனியை விட புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது - ஹர்பஜன் சிங்!
பின்னர் ஆடிய இந்தியா அணிக்கு சவுரவ் கங்குலி 17, அசாருதீன் 14 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது தான் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடி வந்த சச்சின் 131 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், இந்தியா 46 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
100 சதங்கள் சாதனை எனது 24 வருட கடின உழைப்பு; அதை கோலி முறியடித்தால் நான் வருத்தப்படுவேன் - சச்சின்!
இந்த நிலையில், வரும் 24 ஆம் தேதி சச்சின் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 143 ரன்கள் எடுத்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆன நிலையிலும், அதனை கொண்டாடும் வகையில் மும்பையில் ரசிகர்களால் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு கேக் வெட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.