MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!

IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள் விளாசி முதல் இந்திய வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்து

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 23 2023, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது ஐபிஎல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

இதில், சாம் கரண் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இதே போன்று, ஹர்ப்டீத் சிங் 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சில் க்ரீன் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

39
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

இதையடுத்து கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் அதிர்ச்சி கொடுத்தார். ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 44 ரன்கள் சேர்த்தார். இதில் 3 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். 3 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார். முதல் இந்திய வீரராக ஹிட்மேன் ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.

49
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களும், ஏபிடிவிலியர்ஸ் 251 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். இவர்களது வரிசையில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவதாக ரோகித் சர்மா 250 சிக்ஸர்களுடன் இணைந்துள்ளார்.

59
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

கேமரூன் க்ரீன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், 3 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியாக டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் களத்தில் இருந்தனர்.

69
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் பந்து வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 3ஆவது பந்தை யார்க்கராக வீசி திலக் வர்மாவை கிளீன் போல்டாக்கினார். இதில், மிடில் ஸ்டெம்ப் பாதியாக உடைந்தது. அடுத்து 3 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 
 

79
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

3 சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி. அப்போது, இம்பேக்ட் பிளேயராக வந்த நேஹால் வதேரா களமிறங்கினார். 4ஆவது பந்தையும் யார்க்கராக வீசி வதேராவை கிளீன் போல்டாக்கினார். ஆனால், அப்போது மிடில் ஸ்டெம்ப் உடைந்தது.

89
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

அடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்கினார். 5ஆவது பந்தில் ரன் எடுக்காத நிலையில், 6ஆவது பந்தில் மட்டுமே ஒரு ரன் எடுக்கப்பட, கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

99
ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா 250 சிக்ஸர்கள்

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் 7 போட்டிகளில் விளையாடிய 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs AFG 2nd T20: தமிழக வீரர் விலகல்.. சஞ்சு சாம்சன் நீக்கம்.. இளம் வீரருக்கு இடம்.. பிளேயிங் லெவன்!
Recommended image2
Trophy Controversy: துபாயில் உச்சக்கட்ட டிராமா.. கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி!
Recommended image3
Abhishek Sharma Record: சுனாமியாக கொந்தளித்த அபிஷேக் சர்மா... T20-ல் புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved