Asianet News TamilAsianet News Tamil

ஹேப்பி பர்த்டே விராட் கோலி – இக்கட்டான சூழலில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட வெற்றி நாயகன்!

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

Virat Kohli Celebrate his 35th Birthday today
Author
First Published Nov 5, 2023, 10:59 AM IST | Last Updated Nov 5, 2023, 10:59 AM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1988 ஆம் ஆண்டு நவம்பவர் 5ஆம் தேதி டெல்லியில் பிறந்தார். அதன் பிறகு 20 ஆண்டுகளில் 2008 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று தற்போது வரையில் விளையாடி வருகிறார். இதுவரையில் அவரது சாதனைகளை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சாதனைகள் பற்றி பார்க்கலாம்…

தொடர்ந்து 5 தோல்வி – மோசமான சாதனையில் நடப்பு சாம்பியன்: உலகக் கோப்பையிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றம்!

கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 31 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது, விராட் கோலி மட்டும் கடைசி வரை விளையாடி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முழங்கால், கட்டை விரல் காயத்தைப் பற்றி கவலையில்லை – 17 மீட்டர் ஓடி சென்று கேட்ச் பிடித்த வில்லியம்சன்!

இலங்கைக்கு எதிரான போட்டி - 2012

கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 321 ரன்கள் தேவை. இந்தப் போட்டியில் கிங் கோலி 86 பந்துகளில் 133 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதில் இந்திய அணி 36.4 ஓவர்களில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி – 2014

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இடம் பெற்ற விராட் கோலி 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசி சாதனை படைத்தார்.

உலகக் கோப்பை இறுதி போட்டி நாளன்று ஏர் இந்தியா விமானங்களை முடக்கப் போவதாக மிரட்டல் - குர்பத்வந்த் சிங் பண்ணுன்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி – 2018

பிர்மிங்காமில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 149 மற்றும் 51 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை 2012

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலி 148 பந்துகளில் 183 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios