உலகக் கோப்பை இறுதி போட்டி நாளன்று ஏர் இந்தியா விமானங்களை முடக்கப் போவதாக மிரட்டல் - குர்பத்வந்த் சிங் பண்ணுன்!
வரும் நவம்பர் 19ஆம் தேதி சீக்கிய சமூகத்தினர் ஏர் இந்தியா பயணத்தை தவிர்க்க வேண்டும். அன்று ஏர் இந்தியா விமானங்களை முடக்கப் போவதாக காலிஸ்தான் இயக்க தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன் எச்சரித்துள்ளார்.
காலிஸ்தான் இயக்கத்தின் தலைவரும், தடைசெய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி (SFJ) அமைப்பின் தலைவருமான குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: சீக்கிய சமூகத்தினர் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் உலகளாவிய முற்றுகையின் ஒரு பகுதியாக, ஏர் இந்தியாவை இயக்க அனுமதிக்க மாட்டோம். நவம்பர் 19 முதல் ஏர் இந்தியா சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் இது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
நவம்பர் 19-ம் தேதி இந்திரா காந்தி விமான நிலையம் முடக்கப்படும் என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். "இந்த நவம்பர் 19 உலக பயங்கரவாதக் கோப்பையின் இறுதிப் போட்டியுடன் ஒத்துப்போகிறது" என்று பண்ணுன் குறிப்பிட்டார். வரும் நவம்பர் 19ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்கிறது. இந்த நாளில் தான் ஏர் இந்தியா விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.
24 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக விக்கெட்டே இல்லாமல் ஓவரை முடித்த ஷாகீன் அஃப்ரிடி!
"அந்த நாளில், சீக்கிய சமூகத்தின் மீதான இந்தியாவின் அடக்குமுறையை உலகம் காணும். மேலும் பஞ்சாப் சுதந்திரம் அடைந்தவுடன் விமான நிலையத்தின் பெயர் ஷாஹித் பியாந்த் சிங், ஷாஹித் சத்வந்த் சிங் காலிஸ்தான் விமான நிலையம் என மாற்றப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.
அக்டோபர் 31, 1984 அன்று புதுதில்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமான மெய்க்காவலர்கள் பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங். பஞ்சாபின் சுதந்திரத்திற்கான போராட்டம் ஏற்கனவே காலிஸ்தான் வாக்கெடுப்புடன் தொடங்கிவிட்டது. அதனை எத்தனை பீரங்கிகள் வந்தாலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்று நம்புவதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக இதே போன்று கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை முதல் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும். இந்த அக்டோபரில், அது உலகக் கோப்பையாக இருக்காது. இது உலக பயங்கரவாதக் கோப்பையின் தொடக்கமாக இருக்கும் என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.