24 ஒரு நாள் இன்னிங்ஸ்களில் முதல் முறையாக விக்கெட்டே இல்லாமல் ஓவரை முடித்த ஷாகீன் அஃப்ரிடி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி ஒரு விக்கெட் கூட இல்லாமல் ஓவரை முடித்துக் கொடுத்துள்ளார்.

Shaheen Afridi completes an innings without taking a wicket for the first time in 24 ODI innings rsk

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 35ஆவது லீக் தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணியில், டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

NZ vs PAK:பாகிஸ்தானை பந்தாடிய ரச்சின் ரவீந்திரா – கேன் வில்லியம்சன் கூட்டணி: நியூசிலாந்து 401 ரன்கள் குவிப்பு!

அதன் பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். வில்லியம்சன் மற்றும் ரவீந்திரா இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி 2ஆவது விக்கெட்டிற்கு 180 ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 94 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உள்பட 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரவீந்திரா 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார்.

England vs Australia: வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் – ஆஸி,க்கு சாதகமான ரெக்கார்ட்ஸ்!

இவரைத் தொடர்ந்து வந்த டேரில் மிட்செல் 29 ரன்களும், மார்க் சேப்மேன் 39 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக டாம் லாதம் 2 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 26 ரன்களும் எடுக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்துள்ளது.

இதன் மூலமாக உலகக் கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து இணைந்துள்ளது. இதில், தென் ஆப்பிரிக்கா 3 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

CWC 2023: டெல்லியில் வீரர்களுக்கு இருமல் பாதிப்பு – பயிற்சியை ரத்து செய்த வங்கதேச அணி!

பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் முகமது வாசீம் ஜூனியர் 3 விக்கெட்டுகளும், ஹசன் அலி, ஹரீஷ் ராஃப் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி 10 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட இல்லாமல் 90 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதுவரையில் இல்லாத வரையில் முதல் முறையாக 25 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இன்னிங்ஸை முடித்துக் கொடுத்துள்ளார்.

Pakistan vs New Zealand: கட்டாய வெற்றியை நோக்கி நியூசிலாந்து – பாகிஸ்தான் – டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங்!

இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் (35ஆவது லீக் போட்டி உள்பட) ஷாகீன் அஃப்ரிடி 16 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஆனால், இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. அதுமடுமின்றி, உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் அதிக ரன்களை வாரி கொடுத்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சார்பில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர்கள்:

0/90 – ஷாகீன் அஃப்ரிடி vs நியூசிலாந்து, பெங்களூரு, 2023

1/85 – ஹரிஷ் ராஃப் vs நியூசிலாந்து, பெங்களூரு, 2023

1/84 – ஹசன் அலி vs இந்தியா, மான்செஸ்டர், 2019

3/83 – ஹரிஷ் ராஃப் vs ஆஸ்திரேலியா, பெங்களூரு, 2023

CWC 2023, Hardik Pandya: உலகக் கோப்பையிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகல் – அணியில் இடம் பெற்ற பிரஷித் கிருஷ்ணா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios