CWC 2023: டெல்லியில் வீரர்களுக்கு இருமல் பாதிப்பு – பயிற்சியை ரத்து செய்த வங்கதேச அணி!
வங்கதேச அணி வீரர்களுக்கு இருமல் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று நடக்க இருந்த பயிற்சியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.
இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலிருந்து வங்கதேச அணி முதல் அணியாக வெளியேறியது. வங்கதேச அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வரும் 6ஆம் தேதி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 38ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கிறது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி 3 நாட்கள் பயிற்சியை திட்டமிட்டு இருந்தது. அதன்படி நேற்று மாலை 6 மணி பயிற்சிக்கு மைதானம் வந்திருக்க வேண்டும். ஆனால், வங்கதேச வீரர்கள் வரவில்லை. இந்த நிலையில் தான், கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், கொல்கத்தாவிலிருந்து வங்கதேச வீரர்கள் டெல்லிக்கு வந்தனர். அப்போது முதல், வங்கதேச வீரர்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு டெல்லியில் உள்ள காற்று மாசுபாடு தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்று தரத்தினை குறிக்கும் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக டெல்லியில் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் திறந்த வெளியில் வங்கதேச வீரர்கள் பயிற்சி மேற்கொண்டதால், அவர்களுக்கு இருமல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கதேச அணி கடைசி 2 போட்டிகளை வெற்றியோடு நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NED vs AFG: ஒரே போட்டியில் 4 ரன் அவுட் – கடைசி வரை பொறுமையாக விளையாடிய நெதர்லாந்து 179க்கு அவுட்!