Asianet News TamilAsianet News Tamil

நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு சிக்கல்!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Afghanistan Beat Netherland by 7 wickets difference in 34th Match of world cup 2023 at Lucknow rsk
Author
First Published Nov 3, 2023, 8:54 PM IST | Last Updated Nov 3, 2023, 8:54 PM IST

ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி லக்னோவில் நடந்தது. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்கள் எடுத்தார். மேக்ஸ் ஓடவுட் 42 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது நபி 3 விக்கெட்டுகளும், நூர் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

NED vs AFG: ஒரே போட்டியில் 4 ரன் அவுட் – கடைசி வரை பொறுமையாக விளையாடிய நெதர்லாந்து 179க்கு அவுட்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன்களும் இப்ராஹிம் ஜத்ரன் 20 ரன்களும் எடுத்தனர். அதன் பிறகு ரஹ்மத் ஷா மற்றும் ஹஷ்மதுல்லா ஷாகிடி இருவரும் கூட்டணி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ரஹ்மத் ஷா 52 ரன்களில் ஆட்டமிழக்க, அஸ்மதுல்லா உமர்சாய் 31 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் சேர்த்தார். இறுதியாக ஆப்கானிஸ்தான் 31.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 181 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து தொடர்ந்து 8ஆவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆஃப்கானிஸ்தான் 8 புள்ளிகள் பெற்றுள்ளதால், அடுத்து வரும் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios