ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.3.80 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Rs 3.80 crore incentive for Tamil Nadu athletes who won medals in the Asian Para Games-rag

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர்.

Rs 3.80 crore incentive for Tamil Nadu athletes who won medals in the Asian Para Games-rag

அந்த வகையில், சீனாவில் கடந்த அக்டோபர் 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்ற Asian Para Games-ல் பங்கேற்று பதக்கங்களை குவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மாற்றுத்திறனாளி தம்பி - தங்கைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக (High Cash Incentive) மொத்தம் ரூ.3.82 கோடியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் இன்று வழங்கினோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Rs 3.80 crore incentive for Tamil Nadu athletes who won medals in the Asian Para Games-rag

மேலும், இந்தப்போட்டியில் பங்கேற்று திரும்பியுள்ள 11 வீரர் - வீராங்கனையருக்கு, அவர்கள் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ.22 லட்சத்துக்கான காசோலையை வழங்கி வாழ்த்தினோம். நம் வீரர்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கீழே வந்து தான் ஆகணும்.. ரஜினி சொன்ன கழுகு கதையும், ரத்னகுமார் கிளப்பிய சர்ச்சையும்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios