தொடர்ந்து 5 தோல்வி – மோசமான சாதனையில் நடப்பு சாம்பியன்: உலகக் கோப்பையிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றம்!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 36ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பையிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 36ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. இதில், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 71 ரன்கள் எடுத்தார். கேமரூன் க்ரீன் 47 ரன்கள் கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணியில் பவுலிங்கை பொறுத்த வரையில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மார்க் வுட் மற்றும் அடில் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர், கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்தார்.
உலகக் கோப்பையில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 1992 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கிரஹம் கூச் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். அதன் பிறகு வந்த ஓரளவு ரன்கள் சேர்த்தனர். டேவிட் மலான் 50 ரன்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 42 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 32 ரன்களும் எடுத்தனர். ஜோஸ் பட்லர் 1 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
Pakistan vs New Zealand: மழையால் ஓவர்கள் குறைப்பு – பாகிஸ்தானுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்கு!
இறுதியாக இங்கிலாந்து 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளில் இங்கிலாந்து 6ஆவது தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பையில் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்த 2ஆவது அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக வங்கதேச அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக வங்கதேச அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து 2ஆவது அணியாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வரும் 8 மற்றும் 11 ஆம் தேதிகளில் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.
- Adam Zampa
- Ahmedabad
- Australia vs England
- Bangladesh Eliminated
- Ben Stokes
- Chris Woakes
- Cricket World Cup 2023 Semi Finals
- Dawid Malan
- ENG vs AUS
- ENG vs AUS 36th Match
- England Eliminated
- England vs Australia
- England vs Australia 36th Match
- England vs Australia Live Streaming
- England vs Australia World Cup Match
- ICC Cricket World Cup 2023 Points Table
- Jonny Bairstow
- Jos Butler
- Pat Cummins
- Watch ENG vs AUS Live
- World Cup Semi Finals