டுவிட்டருக்கு சந்தா கட்டாத நிலையில், எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களில் டுவிட்டர் புளூ டிக் மார்க் நீக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், கிரிக்கெட் பிரபலங்கள் பிஸியாக இருக்கின்றனர். இந்த நிலையில், டுவிட்டருக்கு மாத சந்தா கட்டாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி ஆகியோரது டுவிட்டர் புளூ டிக் மார்க்கை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
அதாவது, சினிமா முதல் கிரிக்கெட் வரையிலான பிரபலங்கள் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமான அக்கவுண்ட் என்றால் அவர்களது டுவிட்டர் அக்கவுண்டில் புளூ டிக் மார்க் இருக்கும். ஆனால், எப்போது எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினாரோ, அப்போதிலிருந்து டுவிட்டரில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு வருகிறது. டுவிட்டரின் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் சேவைக்கு கட்டணம் நிர்ணயித்தது. அதாவது, Twitter Paid Servie (பணம் கட்டினால் சேவை). இதற்காக மாதத்திற்கு தனிநபராக இருந்தால் 8 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.657 கட்ட வேண்டும். இதுவே பிஸினஸ் காரணமாக இருந்தால் மாதம் 1000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.82 ஆயிரம் (தோராயமாக) கட்ட வேண்டும்.
IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!
இதற்கு பலரும் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்திருந்தனர். அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் வேண்டுபவர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி புளூ டிக் மார்க் பெற்றனர். ஆனால், அதற்குரிய கட்டணத்தை செலுத்தாத டுவிட்டர் பயனாளர்களின் அதிகாரப்பூர்வ புளூ டிக் மார்க்கை டுவிட்டர் அதிரடியாக நீக்கியுள்ளது. இதுவரையில் தோனி, கோலி, ரோகித் சர்மா என்று கிரிக்கெட் பிரபலங்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்துகிறார்களா இல்லையா என்பது குறித்து தெளிவாக தெரியாத நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
IPL 2023: 25 வருடங்களுக்கு பிறகு அதே உணர்வு - டெல்லி வெற்றிக்கு பிறகு சவுரவ் கங்குலி பெருமிதம்!
ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் டுவிட்டர் அதிகாரப்பூர்வ வணிக அக்கவுண்ட் என்பதால், அவர் சரிபார்க்கப்பட்ட அதாவது அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் பெற்றார். ஆனால், அது வணிக அக்கவுண்ட் என்பதால் புளூ டிக் மார்கிற்கு பதிலாக கோல்டன் செக்மார்க் மூலம் அடையாளம் காணப்படுகிறது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் டுவிட்டர் புளூ டிக் மார்க் நீக்கப்பட்டுள்ளது.
