IPL 2023: ரோகித் சர்மாவுக்கு மறைமுகமாக செக் வைக்கும் முகமது சிராஜ்; WTC Finalக்கு விராட் கோலி தான் கேப்டனா?
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட விரும்புவதாக முகமது சிராஜ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பாப் டூப்ளெசிஸ் கேப்டனாக இருந்தார். ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த 27ஆவது போட்டியில் டூப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கவே, விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
IPL 2023: விராட் வெறும் பெயர் மட்டுமல்ல அது ஒரு பிராண்ட் - நடிகர் அகில் அக்கினேனி!
இதில், விராட் கோலி 59 ரன்னும், பாப் டூப்ளெசிஸ் 84 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு 37 ரன்கள் மட்டுமே ஆர்சிபி கூடுதலாக எடுத்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், பிராப்சிம்ரன் சிங் 46 ரன்னும், ஜித்தேஷ் சர்மா 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!
இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆர்சிபி அணியை பொறுத்த வரையில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
IPL 2023: தோனியை பார்ப்பதற்காக தனது பைக்கையும் விற்று விட்டு வந்த கோவா ரசிகர்!
இதையடுத்து பேசிய முகமது சிராஜ் கூறியிருப்பதாவது: விராட் கோலியின் கேப்டன்ஷியில் விளையாட விரும்புகிறேன். எப்போதும் அவர் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். அவரது தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். வரும் ஜூன் 7 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இதுவரையில் இந்தியாவிற்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ஆனால், டி20 போட்டிக்கு மட்டும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து தனது பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்த தவறி வருகிறார். அப்படியிருக்கும் போது முகமது சிராஜ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் தலைமையில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார்.