IPL 2023: தோனியை பார்ப்பதற்காக தனது பைக்கையும் விற்று விட்டு வந்த கோவா ரசிகர்!
கோவாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தான் வைத்திருந்த பைக்கு கூட விற்று விட்டு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனியை பார்த்துவிட வேண்டும் என்பதற்காக ரசிகர் வந்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 24 ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ஷிவம் துபே, ரகானே, டெவான் கான்வே ஆகியோரது அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு வந்த மேக்ஸ்வெல் மற்றும் டூப்ளெஸ்சி காம்பினேஷனில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற சென்னைக்கு வெற்றி வாய்ப்பு சாதகமானது.
IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!
அதன் பிறகு தினேஷ் கார்த்திக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இதில், தோனியின் ரசிகர்களும் இடம் பெற்றிருந்தனர். சென்னை அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் சிஎஸ்கே ரசிகர்களும், தோனியின் ரசிகர்களும் மைதானத்திற்கு வருவது வழக்கம். உலகத்தில் எங்குமிருந்தும் கூட தோனியை காண்பதற்காகவே ரசிகர்கள் வருகின்றனர்.
IPL 2023: பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!
அப்படி தீவிரமாக இருக்கும் ரசிகர்களில் ஒருவர் தனது பைக்கையும் விற்றுவிட்டு தோனிக்காக மைதானத்திற்கு வந்துள்ளார். கோவாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது பைக்கை விற்று விட்டு கோவாவிலிருந்து தோனிக்காக வந்துள்ளார். அவர் ஏந்தியுள்ள பதாகை தான் சமூக வலைதளங்களில் வருகிறது. இவ்வளவு ஏன் தோனிக்காக தனது வீட்டையே மஞ்சள் நிற மாற்றி புகைப்படங்களை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அதில், இவர் சற்று விதி விலக்காக தான் வைத்திருந்த பைக்கை விற்று விட்டு கோவாவிலிருந்து பெங்களூருவிற்கு போட்டியை காண வந்திருக்கிறார். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.