ஷ்ரேயாஸ் ஐயருக்கு வெற்றிகரமாக நடந்து முடிந்த முதுகுப் பகுதி அறுவை சிகிச்சை; 50 ஓவர் உலகக் கோப்பை வாய்ப்பு!
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.
இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4ம் வரிசையில் இறங்குவதற்கு பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர். 2017ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கி ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடியபோதிலும், காரணமே இல்லாமல் ஒதுக்கப்பட்டார். 2019 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடமும் கிடைக்கவில்லை.
IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!
அதன்பின்னர் மீண்டும் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர் டி20 அணியில் சூர்யகுமார் யாதவிடம் தனது இடத்தை பறிகொடுத்தாலும், ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்தார். ஆனால் இடையிடையே அவர் காயமடைவதுதான் அவருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. தோள்பட்டை காயமடைந்து விலகியபோதுதான் சூர்யகுமார் யாதவிடம் இடத்தை இழந்தார்.
IPL 2023: 25 வருடங்களுக்கு பிறகு அதே உணர்வு - டெல்லி வெற்றிக்கு பிறகு சவுரவ் கங்குலி பெருமிதம்!
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4ம் வரிசைக்கான முதன்மை வீரர். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே காயம் காரணமாக அவர் விளையாட வரவில்லை. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆகையால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 3 போட்டியிலும் டக் அவுட்டானார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார். இந்த நிலையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. எனினும், வரும் அகடோபர் மாதம் தொடங்க இருக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2023: விராட் வெறும் பெயர் மட்டுமல்ல அது ஒரு பிராண்ட் - நடிகர் அகில் அக்கினேனி!