IPL 2023: 25 வருடங்களுக்கு பிறகு அதே உணர்வு - டெல்லி வெற்றிக்கு பிறகு சவுரவ் கங்குலி பெருமிதம்!
நான் எனது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் ரன்னை எடுக்கும் போது என்ன உணர்வு இருந்ததோ, அதே போன்ற ஒரு உணர்வு இப்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு பிறகு இருக்கிறது என்று ஆலோசகர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. டெல்லி அணியில் பிருத்வி ஷாவிற்குப் பதிலாக பிலிப் சால்ட் அணியில் இடம் பெற்றார். அதே போன்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றார்.
இதையடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜேசன் ராய் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், சுனில் நரைன் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசியாக வந்த ரஸல் தன் பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிய ஸ்கோர் தான் என்று டெல்லி அணியின் ஆலோசர்கர் சவுரவ் கங்குலி, பேட்டிங் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கொஞ்சம் ஜாலியாக இருந்தனர். ஏன், டெல்லி வீரர்கள் கூட அப்படிதான இருந்தார்கள். பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர், பிருத்வி ஷா இருவரும் நிதானமாக ஆடினர். எனினும், வழக்கம் போல் பிருத்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
IPL 2023: விராட் வெறும் பெயர் மட்டுமல்ல அது ஒரு பிராண்ட் - நடிகர் அகில் அக்கினேனி!
அதன் பிறகு வந்த மிட்செல் மார்ஷ் (2), பிலிப் சால்ட் (5), மணீஷ் பாண்டே (21), அமன் கான் (0) என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக டேவிட் வார்னரும் 57 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக அக்ஷர் படேல் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது: கடந்த 1996 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானபோது எனது முதல் ரன்னை அடிக்கும் போது எப்படி உணர்வுப்பூர்வமாக சந்தோஷமாக இருந்தேனோ, அதே போன்று தான் இப்போது முதல் வெற்றி பெற்று புள்ளிகள் பெறும் போது இருந்தது என்று கூறியுள்ளார்.
IPL 2023: கோலியின் மகள் வாமிகாவை டேட்டிங்கிற்கு அழைத்து செல்ல அனுமதி கேட்ட பச்சிளம் சிறுவன்!
இவரைத் தொடர்ந்து பேசிய டேவிட் வார்னர் கூறியிருப்பதாவது: இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பேட்டிங்கில் மட்டும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். வரும் 24 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 34ஆவது போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.