TNPL 2023 Players Salary: சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 6 லட்சம்!
டிஎன்பிஎல் தொடரில் விளையாடும் வீரர்களில் யாரெல்லாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் ரூ.6 லட்சம் வரையில் சம்பளம் வரையில் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை டைட்டில் கைப்பற்றியுள்ளது. டூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் தலா ஒரு முறை டைட்டில் வென்றுள்ளன.
TNPL 2023: முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் – லைகா கோவை கிங்ஸ் பலப்பரீட்சை!
கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இந்த டிஎன்பிஎல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த சீசனின் தொடருக்கான அட்டவணை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த 8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் டி20 போட்டி வரும் ஜூன் 12 ஆம் தேதி இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி வரும் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
அஸ்வினை எடுக்காத போதே இந்தியா மனதளவில் தோற்றுவிட்டது – விரேந்திர சேவாக்!
ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் வீதம் மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என்று 32 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சீசன் முதல், ஐபிஎல் கிரிக்கெட்டைப் போன்று இம்பேக்ட் பிளேயர் விதியும் பின்பற்றப்படவுள்ளது. டிஆர்எஸ் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே ஆஃப் போட்டிகள் மழையால் பாதிகப்பட்டால் ரிசர்வ் டே என்று சொல்லக் கூடிய அடுத்த நாள் அல்லது மாற்று தேதியில் போட்டி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருந்தால் எப்படி தான் விளையாடுவது? – மைதானம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து!
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் டிஎன்பில் தொடரின் 7ஆவது சீசன் இன்று பிரமாண்டமாக தொடங்குகிறது. இதில், முதல் போட்டியிலேயே ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் தொடரில் விளையாடிய சாய் சுதர்சன், ஷாருக்கான், விஜய் சஞ்கர் ஆகியோர் டிஎன்பிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
இதில், யாருக்கெல்லாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் ரூ.6 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ. 6 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் ஏ பிரிவில் இடம் பெற்றவர்கள். இது தவிர ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் உள்பட 20 டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடி வீரர்களுக்கு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் பி1 மற்றும் பி2 பிரிவில் இடம் பெற்றவர்கள். இது தவிர சி பிரிவி கேட்டகரியில் இடம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
TNPL 2023: டிஎன்பிஎல் தொடரில் யாரெல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?
ஜெகதீசன், ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன், ஷாருக்கான், விஜய் சங்கர், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் மற்றும் டி நடராஜன் ஆகியோர் ஸ்டார் பிளேயர்ஸ். இவர்கள் மிகவும் மதிப்புமிக்க வீரர்களாக கருதப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ளனர். ஆதலால், இவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
லைகா கோவை கிங்ஸ்:
ஷாருக்கான், ஜே சுரேஷ் குமார், மணிமாறன் சித்தார்த், சாய் சுதர்சன், எம் முகமது, சச்சின் பி, கௌதம் தாமரைக் கண்ணன் கே, கிரண் ஆகாஷ் எல், முகிலேஷ் யு, ஆதீக் ரஹ்மான் எம்.ஏ, வித்யுத் பி, வள்ளியப்பன் யுதீஸ்வரன், ராம் அரவிந்த் ஆர், ஹேமசரண் பி, திவாகர ஆர், ஜாதாவேத் சுப்பிரமணியன், சுஜய் எஸ், ஓம் பிரகாஷ் கே எம்.
பயிற்சியாளர்: ஸ்ரீராம் சோமயாஜுலா கேப்டன்: ஷாருக்கான்
ஐடிரீம் (IDream) திருப்பூர் தமிழன்ஸ்:
துஷார் ரஹேஜா, விஜய் சங்கர், ஆர் விவேக், ஆர் சாய் கிஷோர், அனிருத் சீதா ராம் பி, சதுர்வேத் என் எஸ், ஜி பெரியசாமி, த்ரிலோக் நாஹ் ஹெச், விஷால் வைத்யா கே, ராகுல் அய்யப்பன் ஹரீஷ், கணேஷ் எஸ், முகமது அலி எஸ், எஸ் மணிகண்டன், எஸ் ராதாகிருஷ்ணன், ஐ வெற்றிவேல், கருப்பசாமி எஸ், பி புவனேஷ்வரன், எம் ராகவன், ஜி பார்த்தசாரதி, அல்லிராஜ் கருப்பசாமி,
பயிற்சியாளர்: பரத் ரெட்டி கேப்டன்: அருண் கார்த்திக்
உரிமையாளர்: சென்னை ராயபுரத்தில் திரையரங்கம் வைத்திருக்கும் ஐடிரீம் சினிமாஸ் நிறுவனம் 3.3 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
- Lyca Kovai Kings
- Lyca Kovai Kings vs IDream Tiruppur Tamizhans
- Lyca Kovai Kings vs IDream Tiruppur Tamizhans 1t Match
- Sai Sudharsan
- Shahrukh Khan
- TNPL 2023
- TNPL 2023 Players List
- TNPL 2023 Squads
- TNPL 8 Teams
- TNPL Most Valuable Players
- TNPL Players Salary
- TNPL Schedule 2023
- Tamil Nadu Premier League 2023
- Tamil Nadu Premier League Schedule
- Tamilnadu Premier League
- Vijay Shankar