TNPL 2023 Auction: சஞ்சய் யாதவை ஓவர்டேக் செய்து உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாய் சுதர்சன்.. மாபெரும் சாதனை

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் ரூ.21.6 லட்சம் என்ற உச்சபட்ச தொகைக்கு விலைபோனார் சாய் சுதர்சன்.
 

tnpl 2023 auction sai sudharsan becomes most expensive player who was bought by lyca kovai kings

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 7வது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான ஏலத்திற்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 2 வீரர்களை தக்கவைத்தது. மற்ற அனைத்து வீரர்களும் ஏலம் விடப்படுகின்றனர். 7வது சீசனுக்கான ஏலம் இன்று மாமல்லபுரத்தில் பிற்பகல் தொடங்கி நடந்துவருகிறது. 

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை ரூ.10.25 லட்சத்திற்கு திருப்பூர் அணி வாங்கியது.  ஃபாஸ்ட் பவுலர் சந்தீப் வாரியரை ரூ.8.25 லட்சம் என்ற பெரிய தொகைக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி வாங்கியது. இந்திய அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ஸ்பின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை ரூ.6.75 லட்சத்திற்கு மதுரை பாந்தர்ஸ் அணியும், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை அதே தொகைக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் வாங்கின. நடராஜனை ரூ.6.25 லட்சத்திற்கு ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வாங்கியது.

ஃபாஸ்ட் பவுலர் சோனு யாதவை ரூ.15.2 லட்சத்திற்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பேட்டிங் ஆல்ரவுண்டரான சஞ்சய் யாதவை ரூ.17.6 லட்சம் என்ற அதிகபட்ச தொகைக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வாங்கியது.

அதுதான் உச்சபட்ச தொகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை ரூ.21.6 லட்சம் என்ற உச்சபட்ச தொகைக்கு லைகா கோவை கிங்ஸ் அணி வாங்கியது. தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்று உச்சபட்ச தொகைக்கு விலைபோன வீரர் என்ற சாதனையை சாய் சுதர்சன் படைத்தார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் ரஞ்சி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி என 3 விதமான ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார் சாய் சுதர்சன். ஐபிஎல்லிலும் கடந்த ஆண்டு முதல் முறையாக களமிறங்கி அறிமுக சீசனில் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அருமையாக ஆடினார் சாய் சுதர்சன்.

பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சாய் சுதர்சனை திண்டுக்கல் டிராகன்ஸுடன் போட்டி போட்டு ரூ.21.6 லட்சம் கொடுத்து லைகா கோவை கிங்ஸ் அணி வாங்கியது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios