பெஞ்ச்ல உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்
இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அஷ்டான் அகரை ஆடவைக்காததற்காக ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்துவருகிறது. இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேதன் லயன், அஷ்டான் அகர், டாட் மர்ஃபி, குன்னெமன் ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்தது ஆஸ்திரேலிய அணி.
இந்தியாவிற்கு எதிராக நல்ல ஸ்பின்னர்களை இறக்கி நெருக்கடி கொடுக்க வேண்டும், இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் அவை இரண்டையுமே அந்த அணி சரியாக செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் நேதன் லயன் மற்றும் அறிமுக ஸ்பின்னர் டாட் மர்ஃபி ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆடியது. அந்த டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியில் 2 இன்; 1 அவுட்..! ஹேசில்வுட் விலகல்
2வது டெஸ்ட்டில் குன்னெமனையும் சேர்த்து 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது. ஆனால் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஒரே செசனில் 9 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 7 விக்கெட்டுகளை ஜடேஜாவிடமே இழந்தது. இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதிலும் சொதப்பி, இந்திய வீரர்களை ஸ்பின்னை வைத்து கட்டுப்படுத்துவதிலும் சொதப்பி 2 டெஸ்ட்டிலும் தோல்விகளை தழுவியது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இடது கை ஸ்பின்னர் அஷ்டான் அகரை ஆடவைக்காததை விமர்சித்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இடது கை ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஜொலித்துவரும் நிலையில், அஷ்டான் அகரை ஆடவைக்காதது குறித்து விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட், அஷ்டான் அகர் ஃபிளைட் பிடித்து ஆஸ்திரேலியாவிற்கு வந்துவிடலாம். ஆஸ்திரேலிய அணியில் தேவையான வீரர்கள் உள்ளனர். தேவைக்கு மிஞ்சித்தான் அஷ்டான் அகர் என்பதை போல உள்ளது அணி நிர்வாகத்தின் செயல்பாடு. அவரை ஆடவைக்காதது அவமானப்படுத்துவது போன்றுதான் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.